வெள்ளி, ஜனவரி 13, 2017

அறுசீர்க் கழிநெடிலடி விருத்தம்கலையெழிற் பெண்ணின் கருவிழி காணக்
... கற்பனை சிறகடிக்கும்
வளைக்கரந் தொட்டு வார்த்தைகள் பேச
... வாஞ்சையில் வாய்துடிக்கும்
அலையெனப் பொங்கும் ஆவலி லிதயம்
... அடிக்கடி துடிதுடிக்கும்
நிலையினை அறிந்து நிம்மதி யற்று
... நினைவுகள் சோர்ந்திடுமே


-

( விளம் - மா - விளம் -மா - விளம் - காய் )

கருத்துகள் இல்லை: