ஞாயிறு, ஜனவரி 15, 2017

விருத்தம்விழுதுகள் போலுள உறவுக லெல்லாம்
வீணெனச் சிதறிக் கிடக்கை யிலே
அழுதவன் பாதி தொழுபவன் மீதி
அமைதி யிலாமலே வாழுகி றான்

கழுகுகள் போலக் காமுக ரிங்கே
கால்களுக் கடியில் கிடக்கை யிலே
மெழுகுகள் போல மழலைக ளுயிர்கள்
அழுகைக ளூடே கரையு திங்கே

இழுபறி யாகும் இழிநிலை ஏனோ
இகத்தினில் கிடந்து சிரிக்கை யிலே
வலுவினி லுள்ளோர் வாய்களை மூடி
வாழ்வதைக் காண வருஞ் சினமே !

கருத்துகள் இல்லை: