சனி, ஏப்ரல் 16, 2016

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

காய் - காய் - காய் - காய் - மா - தேமா விரும்பியவா றெல்லாமிப் பூவுலகில் பொல்லாதார்
   விளைக்குந் துன்பம்
தருக்குடையா ருள்ளத்தில் தூய்மையிலா எண்ணத்தால்
   தளிர்க்குந் துன்பம்
திரும்புகின்ற இடமெல்லாந் தீவினையைக் காணுகையில்
   தீயாய் என்றன்
இதயத்தைச் சுடுகிறதே இருவிழியும் நனைகிறதே
   இறைவா  இங்கே !

கருத்துகள் இல்லை: