வியாழன், டிசம்பர் 04, 2014

ஒற்றைச் சிறகோடு ...

முறிந்த
ஒற்றைச் சிறகோடுதான்
எனக்குள்
பறந்து திரிகிறது
அந்த வண்ணத்துப் பூச்சி


பரிச்சயம் இல்லாமலேயே
பாடாய்ப் படுத்துகிறது
மனசு
சிறகடிக்கும் சமயங்களில்


வேலி மீறியதோ
வாழ்வை
வெட்டி எறிந்ததோ
இன்னும் தெளிவில்லை


வண்ணம்
இழந்தது மட்டும்
உறுதியாகி விட்டது


ஒரு
நதியைப் போல
ஓடிக்கொண்டிருக்கிறது
அந்த
ஒற்றைச் சிறகுப் பூச்சி
ஒதுங்க இடம் தேடியபடி


சங்கமமாவது
என்
கடலில் என்றால்
வழிந்தாவது
வந்து சேரட்டும்
முறிந்த சிறகை
சரிசெய்து கொள்ள ...


- அஷ்பா அஷ்ரப் அலி -

கருத்துகள் இல்லை: