வெள்ளி, ஜூன் 03, 2016

நேரிசை ஆசிரியப் பா !


நன்னிலை பெற்றோர் ஞானத் துளவுந்
தன்னிக ரற்றத் தமிழே உன்னைத்
தாய்மொழி கொண்ட தமிழர் தம்மில்
வாய்மொழி கேட்க வந்திடுஞ் சினமே

அந்நிய மொழியே அசையும் நாவில்
புண்ணிய மொழியாம் பூந்தமி ழென்றே
கலப்படஞ் செய்யுந் தமிழினம்
விலக்கிட வேண்டும் விரைகநட் புகளே !

கருத்துகள் இல்லை: