ஞாயிறு, ஜனவரி 05, 2014

கிராமத்துக் கிளி ..

தாமரை  போலொரு முகத்துடையாள்  -  சிறி
    தாகவே  புன்னகை  பூத்துநின்றாள்
தாமத மின்றியே  ஆவலினால்  -  உனை
    தாவென்  னிதயத்தில்  எனக்கேட்டேன் !


சாமத்தில்  தொற்றிடும்  பித்துனக்கு  -  எனை
    சம்பந்தம்  செய்தவன்  உண்டெனக்கு
காமத்துக்  கிணங்கிட  வாசொன்னாய்  -  நான்
    கிராமத்துக்  கிளியடா   என்றாளவள் !             அஷ்பா அஷ்ரப் அலி  
  

கருத்துகள் இல்லை: