புதன், ஜூன் 01, 2016

வான் மேகத்திலே !


வான்மேகக்  கூட்டத்தில்
  வீடொன்று வேண்டும் - அதில்
என்னோடு நீவந்து
  குடியேற வேண்டும் - தேன்
நிலவோடு நீநின்று
  கதைபேச வேண்டும் - வண்ண
நிலவதுவும் உன்னெழிலில்
  முகம்மூட வேண்டும் - இந்த
விண்பூக்கள் ஒவ்வொன்றும்
  உனைப்பார்க்க  வேண்டும் - இங்கே
மண்வாழும்  மாந்தர்க்கு
உன் ஒளிவீச வேண்டும் !

கருத்துகள் இல்லை: