எப்பொழுதும் போலவே
இன்றும்
அதிர்ந்து ஆடியது வீடு
சிங்கங்கள் இரண்டும்
சீறிக் கொண்டதால்
இரண்டும்
எப்போதாவது ஒரு நாள்
சிரித்துக் கொள்ளும்
சில வேளை
சிணுங்கிக் கொள்ளும்
வியர்க்க வியர்க்க
சிதறிக் கிடந்தன
வார்த்தைகள் வீடெங்கும்
தரையில் கிடந்தபடியே
வெறிக்க வெறிக்க
பார்த்துக் கிடக்கிறாள் தங்கை
ஒன்றுமே புரியாதபடி
ஒருவேளை
எழுந்து
நடக்கப் பழகும் போது
என்னைப் போல
புரிந்து கொள்வாளோ என்னவோ
எனக்குத் தெரியாது
நானும்
அஜிதா டீச்சரின்
அடிக்குப் பயந்து
மனனம் செய்கிறேன்
வாய்ப்பாட்டை
முடியாமலேயே
போய் விடுகிறது
இந்தக் கலவரத்தினால் ...
( அஷ்பா அஷ்ரப் அலி )
இன்றும்
அதிர்ந்து ஆடியது வீடு
சிங்கங்கள் இரண்டும்
சீறிக் கொண்டதால்
இரண்டும்
எப்போதாவது ஒரு நாள்
சிரித்துக் கொள்ளும்
சில வேளை
சிணுங்கிக் கொள்ளும்
வியர்க்க வியர்க்க
சிதறிக் கிடந்தன
வார்த்தைகள் வீடெங்கும்
தரையில் கிடந்தபடியே
வெறிக்க வெறிக்க
பார்த்துக் கிடக்கிறாள் தங்கை
ஒன்றுமே புரியாதபடி
ஒருவேளை
எழுந்து
நடக்கப் பழகும் போது
என்னைப் போல
புரிந்து கொள்வாளோ என்னவோ
எனக்குத் தெரியாது
நானும்
அஜிதா டீச்சரின்
அடிக்குப் பயந்து
மனனம் செய்கிறேன்
வாய்ப்பாட்டை
முடியாமலேயே
போய் விடுகிறது
இந்தக் கலவரத்தினால் ...
( அஷ்பா அஷ்ரப் அலி )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக