வெள்ளி, ஏப்ரல் 12, 2019அலைகள்
ஆர்ப்பரிக்காத
ஒரு
நிசப்த வேளையில்
நனைத்து விட்டேன்
என் கால்களை
உன் கடலில் ..

இப்பொழுதெல்லாம்
சலசலக்கும் ஓடை
நில்லாமல்
ஓடும் நதிகள்
பார்ப்பதே இல்லை ..

குளித்து விடுகிறேன்
என்
இடுப்பில் செருகிய
உன் முகவரியோடு !

- அஷ்ஃபா அஷ்ரஃப் அலி -