செவ்வாய், ஜனவரி 08, 2013

கனவொன்று கண்டேன் !!!

கனவொன்று கண்டேன்
கரை தாழக் கண்டேன்
இனவாதம் பேசும்
இழிந்தோரைக் கண்டேன் ...

வசை பாடும் உலகின்
இழிவோரைக் கண்டேன்
அசைந்தாடும் நெஞ்சின்
ஆசைகள் கண்டேன் ...

நில்லாமல் ஓடும்
நிலவொன்றும் கண்டேன்
நாள் தோறும் போற்றும்
பெற்றோரைக் கண்டேன் ..

கல்லாதார் செய்யும்
தீவிணை கண்டேன்
நல்லோர்கள் தினமும்
மடிவதைக் கண்டேன் ...

இல்லாதார் தெருவில்
இரப்பதைக் கண்டேன்
உள்ளவர் எல்லாம்
உறங்கிடக் கண்டேன் ...

நற்பணி செய்து
நான் வாழக் கண்டேன்
நானிலம் என்னை
தூற்றிடக் கண்டேன் ...

கண்ணுக்குள் வாழும்
அவளையும் கண்டேன்
மென்மையாய் அவளை
தழுவிடக் கண்டேன் ,,,