வெள்ளி, ஜூன் 03, 2016

வெளி விருத்தம்


கண்ணில் காணும் கவிதைகள் சொல்லும் - கவிதைகளாய்
எண்ணம் சொல்லும் என்றன் பேச்சும் - கவிதைகளாய்
கன்னக் குழியின் கவர்ச்சியு முணர்த்தும் - கவிதைகளாய்
தென்னங்  கீற்றும் தெவிட்டா சுவையும் - கவிதைகளாய்


அல்லும் பகலும் ஆதியை வணங்கு - வாழ்நாளில்
சொல்லில் செயலில் சோரா நடப்பாய் - வாழ்நாளில்
கள்ளுஞ் சூதுங் களவுங் களைவாய் - வாழ்நாளில்
உள்ளம் சேர உணர்வு தருவாய் - வாழ்நாளில் 

கருத்துகள் இல்லை: