செவ்வாய், ஜனவரி 08, 2013

கனவொன்று கண்டேன் !!!

கனவொன்று கண்டேன்
கரை தாழக் கண்டேன்
இனவாதம் பேசும்
இழிந்தோரைக் கண்டேன் ...

வசை பாடும் உலகின்
இழிவோரைக் கண்டேன்
அசைந்தாடும் நெஞ்சின்
ஆசைகள் கண்டேன் ...

நில்லாமல் ஓடும்
நிலவொன்றும் கண்டேன்
நாள் தோறும் போற்றும்
பெற்றோரைக் கண்டேன் ..

கல்லாதார் செய்யும்
தீவிணை கண்டேன்
நல்லோர்கள் தினமும்
மடிவதைக் கண்டேன் ...

இல்லாதார் தெருவில்
இரப்பதைக் கண்டேன்
உள்ளவர் எல்லாம்
உறங்கிடக் கண்டேன் ...

நற்பணி செய்து
நான் வாழக் கண்டேன்
நானிலம் என்னை
தூற்றிடக் கண்டேன் ...

கண்ணுக்குள் வாழும்
அவளையும் கண்டேன்
மென்மையாய் அவளை
தழுவிடக் கண்டேன் ,,,

வியாழன், டிசம்பர் 13, 2012

சித்திரப் பெண் !!

கண்ணைக் குறி வைத்து
கற்பனையில் உனை வரைந்த
கையை நான் வெட்டி விட்டால்
கலகங்கள் ஏதுமில்லை ...

கொஞ்சும் புறாவிரண்டும்
கொஞ்சுதலை மறந்து நின்று
உன் எழிலை ரசிக்கையிலே
உருத்துதடி என் உயிரும் ...

பூச்சூடி திலகம் இட்டு
பூ மேனி மனப்பவளே
பூப்பெய்தி காலம் ஆச்சோ
புண் முறுவல் சொல்லுதடி
பூவிதழும் பேசுதடி ....

மல்லிகைச் சரம் அதுவும்
மயங்கியுந்தன் மேனியதை
உற்று உற்று பார்க்கையிலே
உயிர் எனக்கு பிரியுதடி ....

உன் கண்ணை தரை தாழ்த்தி
கை விரலால் நடை பயிலும்
திண்ணைச் சுவர் சாய்ந்தவளே
திரும்பி என்னைப் பாராயோ
உன்னைச் சிறை வைத்து
உட்கார வைத்தது யார் .....

நினைவுகளே ...