வெள்ளி, ஜனவரி 13, 2017

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்விளம்- மா - விளம் - மா
விளம் - விளம் – மா

தன்னிக ரற்றத் தமிழ்மொழி தன்னில்
தாகமென் றுரைப்பவ ரிங்கே
அன்னியர் மொழியை அவரவர்க் குள்ளே
அழகுடன் மொழிவதைக் காண
இன்புற லின்றி இகழ்வதிம் மொழியை
இகழ்வது அன்னையைப் போன்றே
என்பதை யுணரா திருப்பவ ரவரை
என்றுமே எண்ணிடச் சினமே!

கருத்துகள் இல்லை: