புதன், நவம்பர் 06, 2013

காகம் வெறுத்த குயில் ..

பாடிக் களித்ததொரு குயி லொன்றை
கூடிக் குலவியதோர் காகங் காண
வாடிக் குமுறியது தன் அரைகுரலால்
சீண்டித் துரத்தியது மனம் நொந்து !

ஊடல் கொள்ளவொரு கூடில்லை
பாடல் உனக்குவொரு கேடாவென்று
மாடக் கோபுரத்தில் வாழ்வது போல்
வேண்டாக் கதை சொல்லி வருத்தியது !!


     அஷ்பா அஷ்ரப் அலி

கருத்துகள் இல்லை: