வியாழன், நவம்பர் 20, 2014

ஈர மண்ணை விட்டும் ...

ஈர மண்ணில்
கால் புதைத்து நின்றவளை
கீழே தள்ளிவிட்டது
யாரென்று தெரியவில்லை

அந்த
பச்சை உடம்புக்காரியின்
மேனியெங்கும்
வெட்டுக் காயங்கள்

இலைகளையும்
கிளைகளையும் நேசித்தவள்
நிலை குலைந்து கிடந்தாள்
அந்த தெருவோரத்தில்

அந்தி சாய்ந்ததும்
கிளைகளில் தங்கியும்
எச்சமிட்டும் சென்ற பறவைகள்
வந்து  இவளை  பார்த்தபடி
எந்தவித செய்தியும் இல்லை

சோலைக் குடும்பத்தில்
பிறந்தவளை
சாலை விஸ்தரிப்புக்காக
வெட்டி இருக்கிறார்கள்

நா வறண்டு
சரிந்து கிடந்தவள்
முனகலோடு சொல்கிறாள்
வெயிலில் கிடத்தாமல்
விறகுக்காகவாவது
எடுத்துச் செல்லுங்கள்  என ...


 - அஷ்பா அஷ்ரப் அலி -

வெள்ளி, அக்டோபர் 31, 2014

நீயும் நானும் ...


வருகுதே ஈகைத் திருநாள் !!


கனவிலும் ...


முடிவாகச் சொல் ..


என்றும் வேண்டும் ..


ஏழ்மை ..


ஞாயிறு, அக்டோபர் 05, 2014

தேர்ந்து எடு !


அராஜகம் ...


நியாயம் என்ன ?


எங்கும் கண்டேன் !


வளமெல்லாம் நமக்கு இல்லை ..


புதன், ஆகஸ்ட் 27, 2014

வீட்டுக்குள்ளே ...

எப்பொழுதும் போலவே
இன்றும்
அதிர்ந்து ஆடியது வீடு
சிங்கங்கள் இரண்டும்
சீறிக் கொண்டதால்

இரண்டும்
எப்போதாவது ஒரு நாள்
சிரித்துக் கொள்ளும்
சில வேளை
சிணுங்கிக் கொள்ளும்

வியர்க்க வியர்க்க
சிதறிக் கிடந்தன
வார்த்தைகள் வீடெங்கும்

தரையில் கிடந்தபடியே
வெறிக்க வெறிக்க
பார்த்துக் கிடக்கிறாள் தங்கை
ஒன்றுமே புரியாதபடி

ஒருவேளை
எழுந்து
நடக்கப் பழகும் போது
என்னைப் போல
புரிந்து கொள்வாளோ என்னவோ
எனக்குத் தெரியாது

நானும்
அஜிதா டீச்சரின்
அடிக்குப் பயந்து
மனனம் செய்கிறேன்
வாய்ப்பாட்டை

முடியாமலேயே
போய் விடுகிறது
இந்தக் கலவரத்தினால் ...


   ( அஷ்பா அஷ்ரப் அலி )

அழுததெல்லாம் ....


வெறுப்பில் ..


ஏக்கங்கள் ....


நாரை ..