சனி, ஜனவரி 24, 2015

நானும் தங்கையும் ..

அல்லோல
கல்லோலப்பட்டது வீடு
அந்த
அதிகாலையிலேயே !

அடித்துக் கொள்ளாதது
மட்டும்தான் ..

எதிரும் புதிருமாக
வீசிக்கொண்டிருந்தார்கள்
வார்த்தைகளை
அந்த இருவருமே ..

பதற்றத்தில்
பாதி மறந்திருந்தது
நேற்றிரவு
மனப்பாடம் பண்ணிய
வாய்ப்பாடு எனக்கு ..

இவர்களின்
சொல்லடியை விட
டீச்சரின் பிரம்படி
அவ்வளவு
வலிப்பதில்லை
பழகி விட்டது ..

பாவம்
தங்கைதான்
தரையில் கிடந்தபடி
அழுகை நிறுத்தி
பொறுக்கிக் கொண்டிருக்கிறாள் ..

இவர்கள் வீசும்
அசுத்த வார்த்தைகளை
ஒன்றுமே புரியாத படி !


* அஷ்பா அஷ்ரப் அலி *

கருத்துகள் இல்லை: