மனைவி வேண்டும் - தினம்
தொல்லை அற்ற வாழ்வெனக்கு
கிடைக்க வேண்டும் !
தற்பெருமை கொள்ளாத
இல்லாள் வேண்டும் - வெறும்
சொற்பெருமை தினம் பேசா
இனியாள் வேண்டும் !
மனை காக்கும் மகராசி
எனக்கு வேண்டும் - அவள்
எனை ஈன்ற பெற்றோரை
போற்ற வேண்டும் !
இல்லறத்தில் இன்புற ஓர்
இனியாள் வேண்டும் - தினம்
நல்லறங்கள் செய்பவளாய்
இருக்க வேண்டும் !
ஈகை நிறை மனம் கொண்ட
மங்கை வேண்டும் - தான்
ஈன்றெடுக்கும் குழந்தைக்கும்
நல்லதொரு தாயாய் வேண்டும் !
வாழ்வில் என்றும் என்னோடு
துணையாய் வேண்டும் - வரும்
தாழ்வில் எந்தன் கரம் கோர்க்கும்
தாரம் வேண்டும் !
நாலு குணம் கொண்டவளாய்
துணைவி வேண்டும் - தினம்
பால் பொழியும் நன்னாட்கள்
விடிய வேண்டும் !
நிறைந்து விட உள்ளத்தில்
ஒருத்தி வேண்டும் - அது
இறைவனவன் அருட்கொடையாய்
அமைய வேண்டும் !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக