வெள்ளி, மார்ச் 03, 2017

நாய் ...தொல்லைகள் தாங்கியும் வாழ்ந்திடலாம்
துன்பமு மேற்றுக் கிடந்திடலாம்
கல்லடி மட்டும் மில்லையெனில்
கவலை யிலாமலே வாழ்ந்திடலாம் !

தெருவினி லெங்குந் திரிந்திடலாம்
தேம்பியே அழுதும் புரண்டிடலாம்
நெருடலில் காண்போர் நினைக்கையிலே
நிம்மதி யறுந்தே வீழ்கிறதே !

எல்லை யிலாமலே அலைந்திடலாம்
ஏளனப் பட்டுங் கிடந்திடலாம்
'சொல்லடி' பட்டே வாழ்வதிலும்
சொல்லிக்கொ ளாமலே மாள்வதுமேல் !

கருத்துகள் இல்லை: