புதன், ஆகஸ்ட் 07, 2013

தொட்டால் சுடுவதில்லை !!

மலை (சிலை )



அழியாத
வாழ்வு வாழும்
பதறாத
மலைகள் கூட

உளி கொண்டு
செதுக்கும் போதும்
துளி கூட
அழுவதில்லை

பலியாகி
மாண்டால் கூட
நல்ல சிலையொன்று
ஆகும் என்று

மானம் உள்ள
மலை பெயரை
மனதார
சொல்வதில்லை

விலை போகும்
சிலைகளோடு
உளி கொண்ட
சிற்பி கூட ....

ஞாயிறு, ஜூலை 28, 2013

உன்னையறிந்தால் ....

Jtû\V¥l TôûR«úX
K¥j §¬kR LôXm
Utù\ÕÜm ùR¬VôUp
á¥j §¬kR LôXm
ùLôt\Yu ¿ G]dùLuß
AdLôXm ùR¬k§ÚkRôp
Ñtßm Øtßm TôojRT¥
Lh¥ ØjRm Rk§ÚlúTu !!!

செவ்வாய், ஜூலை 23, 2013

ஏழ்மை ...






தொடர்ந்து செல்ல
பாதை இல்லை ..

படர்ந்து செல்ல
கொடியும் இல்லை ..

இடர்கள் தொடர
இடமும் இல்லை ..

அடர்ந்து வளர்ந்த
துன்பம் தீர்க்க ..

உணர்ந்து உதவ
மாந்தர் இல்லை !!




*அஷ்பா அஷ்ரப் அலி*

வெள்ளி, ஜூன் 21, 2013

வண்ணம் மின்னும் ஓவியம் !

தளிர் விடும் விரலால்
 நீவிய கேசம்
குளிர் தரும் தேகம்
 சாய்ந்திடத் தோன்றும்
மிளிர்ந்திடும் விழியால்
 பிழிந்திடும் இதயம்
குழி விழும் கண்ணம்
 ஒற்றிடத் தோன்றும்
மொழிகளாய் பேசும்
 துடித்திடும் அதரம்
கிளியவள் காணும்
 கனவுதான் ஏதோ ??

வெள்ளி, மே 03, 2013

நல்லதொரு தாரம் வேண்டும் !!



வெள்ளை உள்ளம் கொண்டதொரு
 மனைவி வேண்டும்  - தினம்
தொல்லை அற்ற வாழ்வெனக்கு
 கிடைக்க வேண்டும் !
தற்பெருமை கொள்ளாத
 இல்லாள் வேண்டும்  - வெறும்
சொற்பெருமை தினம் பேசா
 இனியாள் வேண்டும் !



மனை காக்கும் மகராசி
 எனக்கு வேண்டும்  - அவள்
எனை ஈன்ற பெற்றோரை
 போற்ற வேண்டும் !

இல்லறத்தில் இன்புற ஓர்
 இனியாள் வேண்டும்  - தினம்
நல்லறங்கள் செய்பவளாய்
 இருக்க வேண்டும் !

ஈகை நிறை மனம் கொண்ட
 மங்கை வேண்டும் - தான்
ஈன்றெடுக்கும் குழந்தைக்கும்
 நல்லதொரு தாயாய் வேண்டும் !

வாழ்வில் என்றும் என்னோடு
 துணையாய் வேண்டும் - வரும்
தாழ்வில் எந்தன் கரம் கோர்க்கும்
 தாரம் வேண்டும் !

நாலு குணம் கொண்டவளாய்
 துணைவி வேண்டும்  -  தினம்
பால் பொழியும் நன்னாட்கள்
 விடிய வேண்டும் !

நிறைந்து விட உள்ளத்தில்
 ஒருத்தி வேண்டும்  - அது
இறைவனவன் அருட்கொடையாய்
 அமைய வேண்டும் !!!

சனி, ஏப்ரல் 27, 2013

புற்தரையில் பூவொன்று ...


                
வெள்ளிச் சிறகது போல்
 தனிமையிலே
புற்தரையில்
மல்லாந்து கிடக்கும் இந்த
 செம்பருத்திப் பூ ஒன்று
அந்தி சாயும் நேரத்திலே
 சொந்தம் இன்றி கிடக்கிறதே !!