புதன், ஜனவரி 18, 2017

காற்றே !வையம் எங்கும் உன்பெயரில்
வைதல் லில்லை உணர்வாயோ
பையில் இட்டே வைப்பதெனில்
கையிற் கொண்டே நடந்திடுவோம்

பெய்யும் மழைக்கும் துணைநின்று
மையம் மிட்டும் நின்றிடுவாய்
மெய்தா னுலகில் நீயின்றி
ஐயோ ! உலகில் வாழ்வேது !

எங்கும் மெதிலும் உன்ஓட்டம்
பங்கில் பாதித் துள்ளுதடி
அங்கம் மசைத்து அடிவைத்து
பங்கம் செய்தேன் மகிழுகிறாய்வங்கக் கடலில் உன்ஆட்டம்
நீங்கா நினைவில் நிற்குதடி
சங்கம் வைத்தோ சதிசெய்தாய்
புங்கக் காற்றே பதில்சொல்லு !!

கருத்துகள் இல்லை: